இயக்குனர் மஹி ராகவ் இயக்கத்தில், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாகிய இந்த படத்தில், டாப்ஸி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில், நடிகை டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்க தமன்னாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் .
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை மஹி ராகவ் தமிழிலும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.