தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூளுர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி திமுக அமமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது. அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்த நிலையில் தற்போது வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
சூளூர் – வி.பி கந்தசாமி
அரவக்குறிச்சி – வி.வி செந்தில்நாதன்
திருப்பரங்குன்றம் – எஸ்.முனியாண்டி
ஒட்டபிடாரம் – மோகன்