கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக நடிகர் சூர்யாவும் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் நாளை தமிழ் புத்தாண்டு அன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று நடிகர் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் பாடல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
Yes…most of you hv guessed it right. #KaappaanTeaser tomorrow @LycaProductions @Suriya_offl @Mohanlal @arya_offl @Jharrisjayaraj @bomanirani pic.twitter.com/9Hxx3EQ81L
— anand k v (@anavenkat) April 13, 2019