Mnadu News

அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது…தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கியது

தமிழகத்தை நோக்கி வந்த பானி புயல் நேற்றைய தினம் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும் புயலின் திசைவேக மாற்றம் காரணமாக நிலக் காற்றை கடற்பகுதிக்குள் இழுத்துச் சென்றதால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

இந்நிலையில், இன்று முதல் கோடை வெயிலின்உச்சகட்ட தாக்கமான அக்னி நட்சத்திரம் என்கின்ற கத்திரி வெயில் காலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகின்ற 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால், இந்த காலக்கட்டத்தில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பெரிதளவில் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.அதே நேரத்தில் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Share this post with your friends