Mnadu News

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்குனராக களமிறங்கும் படம் ‘மெய்’. அறிமுக நாயகன் நிக்கி சுந்தரம் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் சார்லி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அணில் பிரித்வி குமார் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this post with your friends