Mnadu News

அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது பிறந்தநாளில் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்யும் விதமாக #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, தங்களின் ட்விட்டர் புகைப்படத்தை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “இணையதள வசதி இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டேன், மன்னித்துவிடுங்கள் நண்பர்களே. பிறந்தநாள் வாழ்த்துகள் தல . உலகெங்கும் இருக்கும் தல ரசிகர்களுக்கு திருவிழா வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார் .

Share this post with your friends