Mnadu News

AK 62 க்கு பிறகு நோ ஷூட்டிங் தல எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் அப்செட்!

வலிமை படத்துக்கு பிறகு அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் “துணிவு”. ஜிப்ரான் இசையில் இப்படம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது. இதற்கான பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வரும் நிலையில், அஜித் தமது 62 படத்துக்கு தயாராகி வருகிறார்.

அஜித்தின் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இந்த படத்துக்கு இசை அமைக்க உள்ளார். இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

இதன் பிறகு அஜித் தமது ரேஸ் பைக்கில் 62 நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதன் பிறகே அவர் தமது 63 வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜித் 63 படத்தை கைப்பற்ற பல முன்னணி இயக்குனர்கள் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends