இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். AK 61 என்று பெயரிடப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், தற்போது படத்தின் பெயர் “துணிவு” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், அஜித் தமது அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்து விட்டார். அது தான் விக்னேஷ் சிவன். இந்த படத்தின் கதை விவாதம் மற்றும் ஸ்கிரிப்டிங் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் வில்லனை தேர்வு செய்து வருகிறது படக்குழு. விஜய் சேதுபதி, ராணா பெயர்கள் எல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது கெளதம் மேனன் என்பது உறுதி ஆகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெளதம் ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிப்பில் நல்ல பெயர் பெற்ற நிலையில் அடுத்தடுத்து நடிப்பதில் மிகவும் பிசியாகி உள்ளார். இதற்கிடையில் வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் உருவாக்கும் பணிகளும், விண்ணை தாண்டி வருவாயா இரண்டாம் பாக பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது குறிப்பிடதக்கது.