Mnadu News

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவர நிதி ஒதுக்கீடு

தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனையில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார்.கேரளாவில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதை குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது .தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதை குறித்து ஆலோசனை நடந்தது .

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது .மேலும் மாநகராட்சிகள் ,பேரூரராட்சிகள் ஊரக பகுதி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார் .

Share this post with your friends