காஷ்மீர் மாநிலத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டதை ஒட்டி சனிக்கிழமை அன்று யாத்திரை ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் ஜம்முவில் உள்ள பகவதிநகர் அடிவார முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும்,மறு உத்தரவு வந்த பிறகு யாத்திரை தொடங்கும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
காஷ்மீர் டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய அப்துல் காதீர் 1931ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சிறைக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், 22 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 13-ம் தேதி காஷ்மீரில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.