Mnadu News

இலங்கை துறைமுகத்தை சுற்றிவளைத்த அமெரிக்க போர் கப்பல்

இலங்கையின் அம்பாந்தோட்டை என்ற இடத்தில் இருக்கும் இலங்கையின் துறைமுகத்துக்கு அமெரிக்காவின் போர் கப்பல் ஓரும் மற்றும் போக்குவரத்து கப்பலும் வந்தடைந்துள்ளது இந்த இரண்டு கப்பலையும் இலங்கை கடற்படை அதிகாரிகளும் அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதகரத்திலுள்ள அமெரிக்க அதிகாரி லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் அந்த கப்பல்களை வரவேற்றனர் .

USS Spruance ஆகப் பிந்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அதி நவீன போர்க்கப்பலாகும். 160 மீற்றர் நீளமும் 9580 டன் எடையும் கொண்ட இந்த கப்பலில் 260 அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளனர்.

103 மீட்டர் நீளம் கொண்ட USNS Millinocket என்ற,கப்பல் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடிய அதிவேக திறன் கொண்டன மற்றும் இந்த போக்குவரத்துக் கப்பல், 2362 டன் எடையுள்ளது.

மேலும் இந்த கப்பல் இலங்கை கடற்படையினருடன் கூட்டு பயிற்சிக்காக வந்ததாக அதிகாரபூர்வமாக இருந்து நாடுகளும் தெரிவித்துள்ளது .

இந்த பயிற்சியின்போது சிறிய படகுகளை கையாளுதல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, , விளையாட்டு, போன்றவற்றின் மூலம், இருதரப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Share this post with your friends