Mnadu News

மக்களுக்காக ஓய்வு எடுக்காமல் உழைப்பவர் மோடி – அமித்ஷா

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்சா மோடி ஓய்வே எடுக்காமல் நாட்டுக்காக உழைத்து வருகிறார். ஆனால் வெளிநாட்டில் ராகுல் காந்தி சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

மோடியை தனக்கு 20 ஆண்டுகாலமாக தெரியும் எனவும் மோடி நாட்டுக்காக 18 மணி நேரம் உழைத்து வருகிறார். ஆனால் ராகுல் காந்தி ஓய்வுக்காக சில மாதங்கள் வெளிநாடுகளில் ஓய்வு எடுப்பதாக அமித்ஷா குற்றம்  சாட்டியுள்ளார்.

2013ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் வாய் கூட திறக்கவில்லை. இதை இப்போது நினைத்தாலும் கூட மனது வலிப்பதாக அமித்ஷா உருக்கமாக பேசியுள்ளார்.

 

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More