நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அமமுக சுயேட்சையாகத் தான் களம்கண்டது. மேலும் ஆறுதல் அளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பொதுச் சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்கியது. சுயேட்சையாகப் போட்டியிட முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது அமமுக கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாயது தான் காரணம்.
இந்நிலையில் காலியாக உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் பொதுச்சின்னம் வழங்குப்படுவதில் சிக்கல் இருப்பதாலும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் அமமுகவை கட்சியாக பதிவு செய்வதாக முடிவு செய்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.
அமமுக கட்சியாக பதிவு செய்தால் அதிமுகவை கைப்பற்றுவதில் சிக்கல் இருப்பதால் சிறையில் இருக்கும் சசிகலா அதிமுக மீட்பு வழக்குகளில் பங்கேற்கிறார். இதனால் அமமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கிற டிடிவி தினகரன் அமமுகவின் பொதுச்செயலாளராக தன்னை பிரகனப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.