Mnadu News

தனுஷின் ‘அசுரன்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் படம் ‘அசுரன்’. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இடையில், தனுஷ் தனது 34வது படத்தில் நடிகை சினேகாவுடன் நடித்து வந்தார்.

இந்நிலையில், ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்றும் நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends