மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கானது சென்னை ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் ஆஜரான வைகோ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், தேசத் துரோக வழக்கில் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத்தயார் என்று கூறி விட்டு தற்போது மேல்முறையீடு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வைகோ, தங்களிடம் ஆலோசனை கேட்க மறந்து விட்டதாக கிண்டல் செய்தார். மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று ஒரு போதும் கூறவில்லை என்று தெரிவித்த வைகோ, கேள்வி கேட்ட செய்தியாளரிடம் கடும் கோவத்தை வெளிப்படுத்தினார் .