நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ‘மாரி 2’ திரைப்படம் வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது சில படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.
இவர் ‘தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற பிரெஞ்சு – ஆங்கில திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் வருகின்ற ஜூன் 21ம் தேதி வெளியாகவுள்ளதாக ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .