நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். இவர் சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் ‘தனிமை’ மற்றும் ‘யார்’ என 2 தமிழ் படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில், ‘தனிமை’ படத்தை திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.