Mnadu News

பிரபுதேவாவின் ‘தேவி 2’ படம் திரையிடும் தேதி அறிவிப்பு

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, சோனு சூட், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் ‘தேவி’. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘தேவி 2’ உருவாகி வந்தது.

‘தேவி 2’ படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படம் வரும் மே மாதம் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதே நாளில் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends