தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ‘யோகி பாபு’. இவர் முதன்முறையாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘தர்மபிரபு’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் இசை வரும் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையைத்துள்ள இந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் மே மாதம் இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.