இளம் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூட்டணியில் உருவான ‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய 2 படங்களும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு ‘தீமை தான் வெல்லும்’ என தலைப்பிடப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தில் அரவிந்த்சாமி துப்பறியும் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவில்லை எனவும், நாயகன் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.