அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகம் மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் அமைத்த ஹீரோ தான் நடிகர் விஜய் தேவர்கொண்டா . சமீபத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை கொடுத்த நிலையில் இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும் காதல் மன்னனாகவும் வளம் வருகிறார் .
இந்நிலையில் இவர் ஒரு பிரபல நடிகையுடன் காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.தமிழில் வெளிவந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நிஷாரிகாவுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா காதலில் இருப்பதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் உள்ளது. இந்நிலையில் இருவரும் திருமணத்தைப் பற்றி வேறு எதாவது பதிவை வெளிவிடுவார்களா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .