டெல்லியில் 76 ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் ஹர்சிந்தர் சிங் செல்லும் வழியில் விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக சென்று பேருதவி செய்து வருகிறார் .
அவரது ஆட்டோவில் விபத்தில் சிக்கியவர்களின் முதலுதவிக்குத் தேவையான பொருட்களை வைத்துள்ளார். தாம் செல்லும் வழியில் யாரேனும் விபத்தில் சிக்க நேர்ந்தால், அவர்களை உடனடியாக மீட்டு முதலுதவி அளித்து இலவசமாக மருத்துவமனையில் சேர்த்து வருகிறார். சராசரியாக நாளொன்றுக்கு ஒருவரை காப்பாற்றுவதாகவும் அந்த முதியவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.