Mnadu News

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் ஒரு பார்வை

ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. அதிலும் மார்வெல் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் நேற்று வெளியாகி இருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ மார்வல் ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஒரு அழகிய பிரியாவிடை விருந்தாக அமைந்துள்ளது.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், கிளைமாக்ஸில் கடைசி 30 நிமிட சண்டை காட்சி மிரட்டலாக அமைந்துள்ளது. பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் வரும் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியும், பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்ட்ரியாவும் பின்னணி குரல் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends