உலக மக்கள் தொகை தினம் இன்று நடைபெறுவதையொட்டி சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் பேரணி நடைபெற்றது.உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை பெசன்ட் நகரில் நடந்த பேரணியில் காயிதே மில்லத், எத்திராஜ் கல்லூரி, மாநில கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சிசு இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கை தமிழகம் முன்னதாகவே எட்டியுள்ளதாகவும் கூறினார்.