தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் கடை வீதியில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியஇயக்குனர் ரஞ்சித் அவர்கள் , மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம் குறித்து விமர்சித்தது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, கும்பகோணம் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் ஆஜராகி இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனையடுத்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று, நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற அவர், நிபந்தனைபடி திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட்டார்.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More