Mnadu News

பிஸ்கட் விற்பனை சரிவால் ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு …

பல்லாண்டு காலமாக நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட பார்லே நிறுவனம், 10,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருப்பதால், வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக பார்லே நிறுவனம் கூறியுள்ளது. கிலோ 100 ரூபாய்க்கும் குறைவான பிஸ்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு கோரியிருப்பதாகவும், அதை மத்திய அரசு செவிமடுக்காவிட்டால் நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்ய நேரிடும் என்றும் பார்லே நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

12 சதவீதமாக இருந்த குறைந்த விலை பிஸ்கெட்டுகள் மீதான வரி, ஜிஎஸ்டி-யில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதனால் பார்லே பிஸ்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்திருப்பதால் இம்முடிவு ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் தொழிலை தொடர்ந்து பிஸ்கெட் துறையும் தற்போது இறங்குமுகத்தில் உள்ளது.

Share this post with your friends