ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்த பசீர் அகமது எனும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதி டெல்லி சிறப்புப் பிரிவு காவலர்களால் கைது செய்யப்பட்டான். கீழமை நீதிமன்றம் விடுவித்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
ஜாமீனில் வெளியே இருந்த பசீர் அகமதுவுக்கு பிணையில் வெளிவர இயலாத பிடிவாரண்டும் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. நீண்ட நாட்களாகத் தேடியும் கிடைக்காததால் அவனது தலைக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இந்நிலையில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் பஷிர் அகமதுவைக் கைது செய்துள்ளனர்.