இந்த வருடத்திருக்கான உலக கோப்பை போட்டியானது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இங்கிலாந்தில் இன்று நடைபெற உள்ளது . முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவுடன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்த 12வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. ஜூலை 14ஆம் தேதி வரை 7 வாரங்களுக்கு இந்த தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன.இதற்கான துவக்க விழா நேற்று லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. கிரிக்கெட் ஜாம்பவான்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.