தமிழி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய ‘மாரி 2’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது ‘அசுரன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் ‘தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர்’ என்ற ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழியில் உருவான படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பார்ஸிலோனோ சாண்ட் – ஜோர்டி சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர் விருது கிடைத்துள்ளது.