Mnadu News

நாசரை எதிர்த்து நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் போட்டி

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், நடிகர் நாசரை எதிர்த்து இயக்குனர் கே.பாக்யராஜ் நிற்க இருப்பதாக எதிரணியினர் அறிவித்துள்ளனர். மேலும் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிற்கவுள்ளார்.

Share this post with your friends