Mnadu News

திரைப்படமாகிறது பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு 

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகளவில் தயாராகிறது. எம்.எஸ்.தோனி, ‍மேரிகோம், சச்சின், உள்பட பல விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், தடகள போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்து தங்கங்களை வென்று குவித்த ‍பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறும் படமாகவுள்ளது. அதன்படி இயக்குனர் ரேவதி வர்மாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ‍பி.டி.உஷாவின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Share this post with your friends