பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரசியல் நோக்கத்தோடு படம் வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மேல்முறையுடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், படத்தை பார்த்து விட்டு அதன் மீதான தடை பற்றி முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்த விளக்கத்தை, ஏப்ரல் 22-ம் தேதிக்குள் மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.