கஜகஸ்தானை சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாட்டில் சேலஞ்ச் தொடர்பான வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த சாகசத்தை வேறு யாராவது செய்ய முடியுமா? என அவர் சவால் விடுக்க, பாட்டில் சேலஞ்ச், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தியாவை பொறுத்தவரை, பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் பாட்டில் சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பாட்டில் சேலஞ்ச் சவாலை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More