ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று சரிந்தது. இந்தக் கட்டடத்தில் 30 ராணுவ வீரர்கள் மற்றும் சில பொதுமக்கள் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் தற்போது வரை இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களில் 17 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் பலியாகியுள்ளனர் .இதற்கிடையே, விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட முதல்வர் ஜெய்ராம் தாகூர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More