உலகளவில் அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் குரங்குகளும் ஒன்றாகும் இந்த குரங்கினத்தில் உராங்குட்டான் வகை மனிதக்குரங்குகள் சற்று அதிகமாகவே அழிந்து வரும் இனமாகும் இந்த வகை குரங்கு இந்தியாவில் ஒன்று மட்டும் தான் இருக்கிறது .
அந்த குரங்கிற்கு பின்னி என்று வைக்கப்பட்டு புனே மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2003ஆம் ஆண்டு ஒடிசா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது .
பொதுவாக இந்த உராங்குட்டான் வகை குரங்குகள் 45 வயது அவரை வாழும் தன்மையுடையது 41 வயதான பின்னிக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது .இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னி நேற்று உயிரிழந்தது .