தற்போதிய காலகட்டத்தில் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி அல்லது நல்ல கருத்து சொல்வது குறைந்து கொன்டே போகிறது . ஒரு சில படங்களே நல்ல கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.
அந்த வரிசையில் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘மங்கி டாங்கி’. இதனை இயக்குனர்கள் அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இதில் நடிகர்கள் ஸ்ரீராம், கிஷோர், பேபி யுவினா, யோஜ்ஜைபீ மற்றும் வந்தனா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
This is super cool! Happy to release the first look of #MonkeyDonkey. Good luck my dear friend @iammrkofficial , @RoobyFilms,@Hasheer75, @Rizaaljainy , @Sreeramkarthick , @kaaliactor , @DoneChannel1 , @soorajskurupp for a super success 🙂 pic.twitter.com/x7uHKFKGZU
— Anirudh Ravichander (@anirudhofficial) May 26, 2019