மேட்டுப்பாளையத்திலிருந்து குடிநீர் பாட்டிகள்களை ஏற்றி கொண்டு பழனி வழியாக கொடைக்கானலுக்கு வந்துகொண்டிருந்த லாரி வெள்ளைப்பாறை என்னும் இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது . லாரியை ஓட்டி வந்த கேரளா மாநிலம் பாலக்காடை சேர்ந்த பீட்டர் என்பவர் படுகாயம் அடைந்தார் . அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மேல் சிகிக்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்க பட்டார். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More