கம்போடியா நாட்டின் பிரே சிஹானௌக் மாகாணத்தில் 7 மாடிகள் கொண்ட கட்டடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத சமயத்தில் அந்த கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தின் போது 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன . இதனையடுத்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து நடந்த இடத்தில் 75 சதவீதம் கட்டுமான இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 25ஆக உயர்ந்துள்ளது .