Mnadu News

கிரண்பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்தது- உயர் நீதிமன்றம்

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றில் அதிகாரிகளிடம் உள்ள ஆவணங்களை கேட்க புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகியான துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று 2017 ஜனவரி 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா விசாரித்து, தீர்ப்பு தேதியை ஒத்திவைத்திருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மகாதேவன், கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்தார்.

Share this post with your friends