Mnadu News

ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்- உச்சநீதிமன்றம்

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்ஜாமின் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் அவர்கள்
மனு தாக்கல் செய்துள்ள நிலையில்,ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

சிதம்பரத்துக்கு முன்ஜாமின் இல்லை எனவும் மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு கூட ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என சிபிஐ அமலாக்கத்துறை முயற்சித்தார்கள் என கபில்சிபல் வாதாடியுளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.மேலும் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என மனுவில் சிபிஐ, அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

Share this post with your friends