Mnadu News

சாஹோ’ படத்தில் இருந்து விலகிய பிரபலங்கள்

இந்திய சினிமாவில் மிகவும் மிரமாண்டமாகவும் அதிக வசூலையும் தேடித்தந்தது மாபெரும் வெற்றியை தேடி தந்த படம் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 .

இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருப்பர் பாகுபலியின் இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த மூவேந்தர்களான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகியுள்ளனர். படக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மாற்றாக வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More