கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள புலியரசி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் , சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், தனது செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்தவாறு பேசியபடியே வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென அதிக வெப்பம் காரணமாக, செல்போன் வெடித்துள்ளது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆறுமுகத்தை மீட்டுஇ சூளகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்போன் வெடித்ததில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம், சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More