Mnadu News

கடலூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்

கடலூர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற யோகா பயிற்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பயிற்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.கடலூர் 5 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கடலூர் மாவட்ட யோகாசன சங்கம் இணைந்து அண்ணா விளையாட்டு பல்வேறு பள்ளி மாணவ மாண்விகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்ச்சியில் ஈடுபட்டனர் .பயிற்ச்சியில் யோகாவினால் கவனத்தை திசை திருப்பாமல் மனதை ஒருநிலை படுத்தி நம்மை நாமே வழி நடத்தி செல்ல உதவும் மேலும் உடல் நலத்தை காக்கும் என யோகா பயிற்ச்சியில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. முன்னதாக மாணவ மாணவிகள் ஊர்வலமாக அண்ணா விளையாட்டு அரங்கிற்கு வந்தனர் அரங்கில் நடைபெற்ற யோகா பயிற்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கலந்து கொண்டு பயிற்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

Share this post with your friends