நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக ‘சந்திராயன்-2’ விண்கலம் நாளை மறுதினம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி திருமலாவில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சந்திராயன்-2 விண்கலம் வருகிற திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.மேலும், 2022ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்பம் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது” என்று கூறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More