இந்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகமான டிஜிசிஏ சென்னை விமான நிலையத்தில் சிறப்புத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஓடுதளத்துக்கு அருகே வெள்ளத்தடுப்புக்காக மேம்படுத்தப்பட்ட மழைநீர்வடிகால் திறந்திருந்ததும், டேக்ஸி வே நீட்டிப்பு மற்றும் புதிய விமான நிலையக் கட்டுமானப் பணிகளால் ஏற்பட்ட மண், கற்கள் போன்றவை ஓடுதளத்தில் கிடந்ததாகவும் டிஜிசிஏ தரப்பில் கூறப்படுகிறது.
இரு ஓடுதளங்களுக்கும் இடையிலான பாதையில் விமானச் சக்கரங்களில் இருந்து வெளியான ரப்பர் கழிவுகள் சரவர அகற்றப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இது விமானங்கள் ஓடுதளத்தை விட்டு சறுக்கிச் செல்லக் கூடிய ஆபத்தையும், விமானம் புறப்படும் போது கழிவுகள் உள்ளிழுக்கப்பட்டு எஞ்சினில் சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.