Mnadu News

சென்னை சேர்ந்த சிறுவன் –13 வயதில் 7கோடி பரிசு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே பார்த்து வியந்துபோய் வீட்டுக்கு சென்று வாழ்த்துத்தெரிவித்தார்.!

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார்.

அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை. சராசரி மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக லிடியன் பியானோ வாசித்ததை பார்த்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானே அசந்துவிட்டார்.

https://www.youtube.com/watch?v=lVaKTpTU44s

இறுதிச் சுற்றில் லிடியன் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்திவிட்டார்.தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார் லிடியன்.இதனை அறிந்த ஆர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று அவர் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.

Share this post with your friends