சென்னை, மும்பை அணிகள் இடையே இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.போட்டியைக் காண சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள். இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில், தமிழகத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்துக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரு அணிகளிலும் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெறுவதால் முன்னெச்சரிக்கையாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.