Mnadu News

தமிழகத்திற்கான புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க ‘யாதும் ஊரே’ என்ற தனி சிறப்புப் பிரிவு மற்றும் வலைத்தளம் 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். கோவையில் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் 200 கோடி மதிப்பில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்றும், காஞ்சிபுரம், நாகை மாவட்டங்களில் 26 கோடி மதிப்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நவீன உத்திகளை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்ய உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆண்டுதோறும் 10 கோடி மதிப்பில் தொழில் வளர் தமிழகம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Share this post with your friends