Mnadu News

காவிரியின் குறுக்கே மேலும் 3 இடங்களில் தடுப்பணைகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, காவிரியின் குறுக்கே போதிய தடுப்பணைகள் இல்லாததால் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதாக கூறினார்.இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீரை சேமிக்கும் வகையில் கொள்ளிடத்திலும், முக்கொம்பிலும் தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், கரூர்- நாமக்கல் இடையே உள்ள காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.முதலமைச்சர், மேலும் மூன்று இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு ஆய்வு நடத்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இதற்காக அந்த பகுதியில் குடியிருப்புவாசிகள் பாதிக்காத வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

Share this post with your friends