ஆந்திர மாநிலத்தில் உள்ள காவல்துறையினருக்கு நாளை முதல் வார விடுமுறை அளிக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், காவலர் முதல் ஆய்வாளர் வரை ஷிப்ட் முறையில் வார விடுமுறை எடுக்கலாம் என்றும் சில மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பெற்ற பின்பு மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதாக டிஜிபி ரவிசங்கர் அய்யனார் கூறினார்.